Wednesday, August 24, 2016


...

Tuesday, April 26, 2016

வரலாற்றில் இன்றைய தினம் 26.04.2016

01. வில்லியம் ஷேக்ஸ்பியர்

✏ ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் மற்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியருமான ஆங்கில இலக்கியமேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்கள் 1564 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி லண்டனில் பிறந்தார். ஷேக்ஸ்பியர் தனது பன்னிரெண்டாவது வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை முடிந்தார்.

✏ அதன்பிறகு முறையான கல்வி கற்க முடியாமல் போனது. பன்னிரெண்டு வயது வரை இலத்தீன் மொழியில் இலக்கண, இலக்கியத்தை அவர் கற்றார். லண்டனை அலைக்கழித்த பிளேக் நோய்தான் பல அமரக் காவியங்களை படைக்கும் வாய்ப்பையும், கால அவகாசத்தையும் ஷேக்ஸ்பியருக்குத் தந்தது. அந்த காலங்களில் அவர் நிறைய நாடகங்களையும், கவிதைகளையும் எழுதிக் குவித்தார். சோனட் எனப்படும் புது வகை கவிதைகளையும் அவர் புனைந்தார்.

✏ அதன்பிறகு அவரது நாடகங்கள் புத்தகமாக வெளிவரத் தொடங்கின. 24 ஆண்டு இலக்கியப் பணியில் அவர் மொத்தம் 37 நாடகங்களை எழுதினார். துன்பியல், இன்பியல் என இரு பிரிவுகளாக அவரது நாடகங்களை வகைப்படுத்தப்படுகிறது. இப்படி கனமான கதாபாத்திரங்களுக்கு வலுவான வசனங்களால் உயிர் ஊட்டியதால்தான் இன்றும் அவை உயிரோவியங்களாக உலா வருகின்றன. தமது படைப்புகள்மூலம் இன்றும் நம்மிடையே உலா வரும் ஷேக்ஸ்பியர் 1616 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி இறந்தார்.

02. அறிவுசார் சொத்துரிமை தினம்

 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26 ஆம் தேதி அறிவுசார் சொத்துரிமை தினம் சர்வதேச ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. மனித வாழ்வில் அன்றாட நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக அறிவுசார் சொத்துரிமையின் பங்களிப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சர்வதேச ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும், அவர்கள் பற்றிய விளக்கங்களை மக்களுக்கு வழங்கவும் இந்நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது. சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் 2000ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவின் படி, 2001ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதியிலிருந்து கொண்டாடப்பட்டு வருகின்றது.

03. கணித மேதை இராமானுஜர் அவர்கள் 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி தனது 33வது வயதில் மறைந்தார்.

04. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றிய மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை அவர்கள் தனது 42வது வயதில் 1897 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி மறைந்தார்.

05. 1865 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனை கொலை செய்த ஜோன் பூத் என்பவனை கூட்டணிப் படைகள் சுட்டுக் கொன்றது.

06. 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி உக்ரைனில் செர்னோபில் அணுமின் உலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. இது உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்தாகும்.

Sunday, April 24, 2016

வரலாற்றில் இன்றைய தினம் 24.04.2016

01. ஜி.யு.போப்

ஏராளமான தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழுக்கு தொண்டாற்றிய ஜி.யு.போப் அவர்கள் 1820 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி கனடாவில் பிறந்தார். இவர் குழந்தையாக இருந்தபோது இவரது குடும்பம் இங்கிலாந்துக்கு குடியேறியது. ஹhக்ஸ்டன் கல்லுரியில் பயின்ற பிறகு, சமயப் பணிக்காக 1839 இல் தமிழகம் வந்தார்.
கப்பலில் பயணம் செய்த 8 மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம் ஜெர்மன் ஆகிய மொழிகளைக் கற்றார். இந்தியாவில் பல பள்ளிகளைத் திறந்து லத்தீன், ஆங்கிலம், ஹீப்ரு, கணிதம், தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்தார்.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு பேராசிரியராக 13 ஆண்டுகள் பணியாற்றினார். 1886இல் திருக்குறளை ளுயஉசநன முரசயட என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இவர் தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் ஆற்றிய அருந்தொண்டு அளவற்றது. திருவாசகம் மீதான இவரது காதல் அபரிமிதமானது. தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய ஜி.யு.போப் தனது 88 வயதில் 1908 ஆம் ஆண்டு மறைந்தார்.

02. சத்திய சாய் பாபா

 இந்திய ஆன்மீக குருவாகப் போற்றப்படும் ஸ்ரீ சத்திய சாய் பாபா அவர்கள் 1926 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் புட்டபர்த்தி என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய ஆன்மீகப் பற்றில் ஈடுபாடு கொண்ட பக்தர்கள் அவரை, கடவுளின் அவதாரமாகவே கருதினர். இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் ஏராளமான இலவசக் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவைகள் புரிந்து வந்தார். இவருடைய பெயரில் சுமார் 1200க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் உலகம்முழுவதும் செயல்பட்டு வருகின்றது. இந்தியாவின் முன்னணி ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவராகப் போற்றப்படும் பகவான் சத்திய சாய் பாபா அவர்கள் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி மறைந்தார்.

03. சச்சின் டெண்டுல்கர்

 இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இவர் தனது 16ஆவது வயதில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல் முதன்முதலாக அனைத்துலக கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். தேர்வுப் போட்டிகளிலும், ஒரு நாள் போட்டிகளிலும் அதிக ரன்களை எடுத்த வீரர் இவரே ஆவார். இந்தியாவில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் விருதையும், விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் இவர் பெற்றுள்ளார்.

04. சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தன் அவர்கள் 1934 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி கடலுரில் பிறந்தார்.

05. 1967 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி சோயுஸ்-1 விண்கலத்தின் பரசூட் விரியாத காரணத்தால் ரஷ்ய விண்வெளி வீரர் விளாடிமிர் கொமாரோவ் அவ்விண்கலத்தில் இறந்தார்.

06. 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி சீனாவின் முதலாவது செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

07. 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி இந்தியாவில் பஞ்சாயத்து அரசுத் திட்டம் அமைக்கப்பட்டது.

Friday, April 22, 2016

வரலாற்றில் இன்றைய தினம் 22.4.16


01. பூமி தினம்

  ☘ பூமி தினமானது ஆண்டு தோறும் ஏப்ரல் 22 ஆம் தேதியன்று பூமியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கத்தோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. 1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில் கலந்து கொண்டவர்களுள் ஒருவரான ஜான் மெக்கானெல் என்பவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்தார்.

☘ மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

☘ அதே சமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும், மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்ப 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி நடத்த அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் பூமி தினம் 175 நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

02. விளாதிமிர் லெனின்

விளாதிமிர் லெனின் ஏப்ரல் 22, 1870இல் ரஷ்யாவில் உள்ள சிம்பெர்ஸ்கில் பிறந்தார். இவர் ரஷ்யாவில் பொதுவுடமை ஆட்சியை நிறுவிய தலைவர்களில் ஒருவர் ஆவார். கார்ல் மார்க்ஸின் பொதுவுடமை கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டதாக சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். 1917ம் ஆண்டு நவம்பரில் ஏற்பட்ட புரட்சியின் விளைவாக லெனின், ரஷ்யாவின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கார்ல் மார்க்சின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதால் நிலம், பொருள், பணம், உழைப்பு, மனிதன் என எல்லாமே அரசின் உடைமையானது. லெனின் தனது 54வது வயதில் 1924 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி உடல் நல குறைவால் மரணமடைந்தார்.

03. 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி தீண்டாமை ஒழிப்பு போரில் பெரியார் கைது செய்யப்பட்டார்.

04. அமெரிக்காவின் 37வது அதிபரான ரிச்சர்ட் நிக்ஸன் 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி காலமானார்.

Thursday, April 21, 2016


01. ரோம் நகரம் உருவாக்கப்பட்ட தினம்

 ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ரோம் நகரின் கலாச்சாரமே சிறந்த வழிகாட்டியாகும். இது இத்தாலியின் தலைநகரம் ஆகும். ரோம் நகரின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கும் முந்தையதாக உள்ளது. பழங்கதைகளின்படி கி.மு.753 இல் ரோம் நிறுவப்பட்டது. ஐரோப்பாவில் நெடுங்காலம் தொடர்ந்து மக்கள் வாழ்ந்திருந்த நகரங்களில் ரோம் ஒன்றாக உள்ளது. இக்காரணத்தால் இந்நகரம் முடிவுறா நகரம் என்றும், உலகத்தின் தலைநகர் என்றும் அழைக்கப்படுகிறது.

02. பாவேந்தர் பாரதிதாசன்

♧ 'தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்" என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரரான பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி புதுவையில் பிறந்தார். இவரது பெற்றோர் கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆவார். இவரது இயற்பெயர் கனக சுப்புரத்தினம் ஆகும்.

♧ பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். இவர் தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லு}ரியில் சேர்ந்தார். மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லு}ரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார்.

♧ பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், புரட்சி கவிஞர் என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, புரட்சிக்கவி என்ற பட்டமும் வழங்கினர். தமிழக அரசு, இவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு 'பாரதிதாசன் விருதினை" வழங்கி வருகிறது. இத்தகைய சிறப்புகளை பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி இயற்கை எய்தினார்.

03. வாண்டுமாமா வி.கிருஷ்ணமூர்த்தி

 சிறுவர் இலக்கிய எழுத்தாளரும் 60 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகைத் துறையில் பணியாற்றியவருமான வாண்டுமாமா என்றழைக்கப்படும் வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி பிறந்தார். அறிவியல், தொழில்நுட்பம் பற்றி படிக்கப் பிடிக்காத சிறுவர்களைக்கூட ஆர்வத்துடன் படிக்கத் தூண்டும் வகையில் எழுதுவது இவரது தனிச் சிறப்பாகும். குழந்தைகளுக்கான கதைகள், நாவல்கள், அறிவியல் நு}ல்கள், சித்திரக்கதைகள் உள்ளிட்ட ஏராளமான குழந்தை இலக்கியங்களைப் படைத்துள்ளார். சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான பரிசுகள், சிறப்பு வெளியீடுகளுக்கான பரிசு உட்பட பல பரிசுகளை பெற்றுள்ளார். இவர் 2014 ஆம் ஆண்டு ஜீன் 12 ஆம் தேதி மறைந்தார்.

04. 1526 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் பானிபட் போர் டில்லியின் சுல்தான் இப்ராகிம் லோடிக்கும், தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபருக்கும் இடையில் இடம்பெற்றது.

05. கிண்டர் கார்டன் கல்விமுறையை உருவாக்கிய ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வியாளர் பிரெட்ரிக் புரோபல் 1782 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி பிறந்தார்.

06. சித்திரை மாதமும், சித்திரை நட்சத்திரமும் கூடி வரும் பௌர்ணமி நாளான சித்ரா பௌர்ணமி இன்று கொண்டாடப்படுகிறது.

Tuesday, April 19, 2016

அண்ட்ராய்டு போனில் Screen Lock செய்து வைத்திருப்பவர்களுக்கு மேலும் ஓர் பயனுள்ள தகவல்:-

அண்ட்ராய்டு போனில் Screen Lock செய்து வைத்திருப்பவர்களுக்கு மேலும் ஓர் பயனுள்ள தகவல்:-

நாம் விபத்தில் சிக்கியிருந்தாலோ அல்லது விபத்தில் சிக்கிய மற்றவர்களின் உறவினர் அல்லது பெற்றோர்க்கு அதே போனில் இருந்து தகவல் அளிக்கலாம்...

உங்கள் போனில் செய்யவேண்டியது இதுதான்...
போனில் உள்ள contacts ல் grops என்ற option இருக்கும்... அதை ஓபன் செய்து அதில் ICE-Emergency contacts ல் உங்கள் பெற்றோர் சகோதரர் உறவினர் உள்ளிட்ட நெருக்கமானவர்களின் எண்களை save செய்து கொள்ளுங்கள்...

உங்கள் போன் லாக்கில் இருக்கும் போது லாக்கின் கீழே emergency calls-ஐ க்ளிக் செய்தால் number pad open ஆகும்.. அதில் உள்ள contact symbolஐ க்ளிக் செய்தால் நீங்கள் save செய்திருக்கும் எண்கள் வரும். அந்த எண்ணிற்கு அந்த மொபைலில் இருந்தே call பண்ண முடியும்...
இதையும் தெரிந்து கொள்வதோடு இவ்வாறு செய்து வைத்துக் கொள்ளுங்கள்...
அவசர காலங்களில் பேருதவியாக இருக்கும்...(முக்கியம் அனைவருக்கும் பகிரவும்)

இந்த நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள் !!💐💐💐